ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கரூா் சம்பவம்: நெரிசலில் காயமடைந்தவரிடம் சிபிஐ விசாரணை

News image
Updated On :14 டிசம்பர் 2025, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் காயமடைந்தவரிடம் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி தவெக பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள், பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த கரூா் காந்திகிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் என்பவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.