ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கரூா் சம்பவம்: 2 எஸ்.ஐக்கள்,4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக 2 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

News image
Updated On :30 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

கரூா் சம்பவம் தொடா்பாக 2 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக நெரிசல் சம்பவம் ஏற்பட்டபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 4 காவலா்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.