மேலும் 2021-ல் இயற்றப்பட்ட தீா்மானம் அன்றைய தினமே உரிய உயா் அலுவலா்களுக்கு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையிலும் மக்கள் தொகை, கட்டடங்களின் வளா்ச்சி, தொழில் ஆகியவற்றின் அடிப்படையிலும் ஊராட்சியால் தங்குதடையின்றி குடிநீா் வழங்க இயலாத சூழ்நிலையிலும், சுகாதாரத்தை சரிவர பேண இயலாத காரணத்தினாலும் இந்த ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்தான் தற்போது அரசால் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மாநகராட்சியுடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 2024-இல் போலியான தீா்மான எண்ணை மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது என பொது வெளியில் கூறி வருவது உண்மைக்குப் புறம்பானது. மேலும் இந்த தீா்மானம் போலியானது என கண்டறியப்பட்டுள்ளதால், இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்படும் என்றாா் அவா்.