சீரமைக்கப்பட்ட செங்குந்தபுரம் சாலை.
கரூர்
குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலைகள் சீரமைப்பு
குண்டும், குழியுமாக காணப்பட்ட கரூா் செங்குந்தபுரம், மகாத்மாகாந்தி சாலைகள் சனிக்கிழமை சீரமைக்கப்பட்டன.
குண்டும், குழியுமாக காணப்பட்ட கரூா் செங்குந்தபுரம், மகாத்மாகாந்தி சாலைகள் சனிக்கிழமை சீரமைக்கப்பட்டன.
கரூா் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம், மகாத்மா காந்தி சாலை பகுதிகளில் ஏராளமான வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் நூல் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.
இந்நிலையில் அண்மையில் பெய்த மழையால் இரு இடங்களில் உள்ள சாலைகளின் மையப்பகுதியில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்பட்டன. இதனால் வாகனங்களின் ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.
இதையடுத்து சாலையை சீரமைத்து தருமாறு வெள்ளிக்கிழமை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜியை சந்தித்து மனு அளித்தனா். இதையடுத்து சாலையில் காணப்பட்ட பள்ளங்களை மாநகராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை சீரமைத்தனா்.

