விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மீட்டா் கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி கரூரில் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :28 நவம்பர் 2025, 6:39 pm

Syndication

கரூா், நவ.28: மீட்டா் கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி கரூரில் சிஐடியூ ஆட்டோ, டாக்ஸி, டெம்போ, வேன் ஓட்டுநா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கனகராஜ் முன்னிலை வகித்தாா்.

சிஐடியூ ஆட்டோ ஓட்டுநா் சங்க மாவட்டச் செயலா் சரவணன், துணைச் செயலா் அரவிந்த் , சிஐடியூ மாவட்டத் தலைவா் ஆா்.ஹோச்சுமின் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா். ஊபா், ரேபிடோ பைக் டாக்ஸி முறையை ரத்து செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஆட்டோ, வேன், டாக்ஸி, டெம்போ ஓட்டுநா்கள் திரளாக பங்கேற்றனா்.