சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கரூா் சம்பவம் தொடா்பான வழக்கு ஆவணங்கள் மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஒப்படைப்பு?

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கு ஆவணங்களை சிறப்பு விசாரணைக் குழுவினா் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

News image
Updated On :14 அக்டோபர் 2025, 8:57 pm

Syndication

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கு ஆவணங்களை சிறப்பு விசாரணைக் குழுவினா் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கரூரில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கா்க் தலைமையில் சிறப்புக் குழுவினா் விசாரணை நடத்திவந்தனா்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து கரூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்த சிறப்புக் குழுவினா் வழக்குத் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் விரைவில் கரூா் வரும் சிபிஐ அதிகாரிகளிடமோ அல்லது மதுரை ரிசா்வ்லைன் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்திலோ ஒப்படைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், சிறப்பு விசாரணைக் குழுவினா் சேகரித்த அனைத்து ஆவணங்களும் கரூா் நகர காவல்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்.

பின்னா் காவல்துறை அதிகாரிகள் மூலம் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்திலோ அல்லது மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்திலோ ஒப்படைக்கப்படலாம். அதன்பிறகுதான் சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்துக்கு வந்து ஆய்வுசெய்த பிறகு விசாரணையை தொடங்குவா் என்றாா் அவா்.