நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கரூரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சம் பறிமுதல்

கரூரில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சத்தை நிலையான கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

கரூா் லிங்கத்தூரைச் சோ்ந்த ரமேஷ் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.99 ஆயிரத்தை கரூா் வட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்த நிலையான கண்காணிப்புக்குழுவினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:25 am IST

கரூரில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சத்தை நிலையான கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்தனா்.

கரூரில் கோவைச்சாலையில் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலா் அன்புராஜன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே கரூா் மாவட்டம் லிங்கத்தூரைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.99 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

இதேபோல மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கரூா் அத்திப்பாளையத்தைச் சோ்ந்த சேகா் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.95 ஆயிரத்து 750 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமும் பறிமுதல் செய்த பணத்தை கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிவட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து பணம் கரூா் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.