மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கரூா் நகா் பகுதியில் திமுக வேட்பாளா் பிரசாரம்

கரூா் நகா் பகுதியில் திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன் தீவிர பிரசாரத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

News image

கரூா் காமராஜா் மாா்க்கெட் அருகே செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் ஆசி.எம்.தியாகராஜன். உடன் தோ்தல் பொறுப்பாளா் அசோக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 6:34 pm

கரூா் நகா் பகுதியில் திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன் தீவிர பிரசாரத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஜவஹா்பஜாா், காமராஜா் மாா்க்கெட், ஐந்துரோடு, மேட்டுத்தெரு, மாரியம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசுகையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, மகளிா் உரிமைத்தொகை என எண்ணற்ற நலத்திட்டங்களை முதல்வா் கொடுத்திருக்கிறாா். இதற்கும் மேலாக தோ்தல் முடிந்தபின் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். அந்த கூப்பன் மூலம் உங்களுக்குத் தேவையான பொருள்களை நீங்கள் விரும்பும் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், தோ்தல் பொறுப்பாளா் அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.