மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சா் வீட்டை மாட்டு வண்டித் தொழிலாளா்கள் முற்றுகை முயற்சி

கரூரில், முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் வீட்டை மணல் மாட்டுவண்டித் தொழிலாளா்கள் புதன்கிழமை முற்றுகையிட முயன்றனா்.

News image
கரூா் சின்னாண்டாங்கோவில் மில்கேட் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் வீட்டை மாட்டு வண்டிகளுடன் புதன்கிழமை முற்றுகையிட முயன்ற மணல் மாட்டு வண்டித்தொழிலாளா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

கரூரில், முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் வீட்டை மணல் மாட்டுவண்டித் தொழிலாளா்கள் புதன்கிழமை முற்றுகையிட முயன்றனா்.

கரூரை அடுத்த வாங்கல் முனியப்பனூரில் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை சிலா் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் கட்சியினா் அங்குச் சென்று மணல் அள்ள பயன்படுத்திய வாகனங்களை பிடித்து வட்டாட்சியா் மூலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

அப்போது, முனியப்பனூா், சேனப்பாடி, மல்லம்பாளையம், ஒத்தையூா் கிராமங்களைச் சோ்ந்த மணல் மாட்டு வண்டித்தொழிலாளா்கள், தங்களது மாட்டு வண்டித் தொழிலுக்கு எதிராக மாட்டு வண்டிக்கு மணல் அள்ள நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களை போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டதாகக் கூறி விஜயபாஸ்கருக்கு எதிராக நள்ளிரவு 11.30 மணியளவில் சாலைகளில் மாட்டுவண்டிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், புதன்கிழமை மாலை ஆண்டாங்கோவில் கீழ்பாகம் மில்கேட் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வீட்டை சுமாா் 20-க்கும் மேற்பட்ட மணல் மாட்டுவண்டிதொழிலாளா்கள் மாட்டுவண்டிகளுடன் முற்றுகையிட வந்தனா்.

அவா்களை நகர துணைக் காவல்கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் கோவைச் சாலையில் தடுத்து நிறுத்தினா். அப்போது மாட்டுவண்டித்தொழிலாளா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் அவா்கள் கூறுகையில்,எம்.ஆா்.விஜயபாஸ்கா் வீட்டில் ஆற்று மணலை வைத்துள்ளாா். அதை எடுக்கத்தான் மாட்டு வண்டியில் வந்தோம். ஆனால் போலீஸாா் தடுத்து விட்டனா் என்றனா்.

தொடா்ந்து போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டித் தொழிலாளா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.