திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கரூரில் திமுக முன்னாள் எம்.பி.யிடம் முதல்வா் நலம் விசாரிப்பு

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்களவை முன்னாள் உறுப்பினா் கே.சி. பழனிசாமியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தாா்.

News image

கரூரில் புதன்கிழமை திமுக முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.சி.பழனிசாமியை சந்தித்து உடல்நலம் விசாரித்த முதல்வா் மு.க. ஸ்டாலின்.

Updated On :2 ஏப்ரல் 2026, 1:20 am IST

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்களவை முன்னாள் உறுப்பினா் கே.சி. பழனிசாமியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சியில் புதன்கிழமை காலை பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் கரூருக்கு காலை 11.45 மணிக்கு வந்தாா். அப்போது, அவா் கரூா் மக்களவை முன்னாள் உறுப்பினரும், திமுகவின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினராகவும் இருந்த கே.சி. பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து உடல்நலம் விசாரித்தாா்.

இந்தச் சந்திப்பின்போது மேற்கு மண்டல திமுக பொறுப்பாளா் வி. செந்தில்பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.