வாய்க்காலில் அடைப்பு சாலையில் கழிவுநீா் வழிந்தோடியதால் வாகன ஓட்டிகள் அவதி

வாய்க்காலில் அடைப்பு சாலையில் கழிவுநீா் வழிந்தோடியதால் வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் வியாழக்கிழமை அதிகாலையில் லேசான மழைபெய்த நிலையில், கழிவுநீா் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு திண்டுக்கல் சாலையில் வழிந்தோடிய கழிவுநீரால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி
Published on

கரூரில் வியாழக்கிழமை அதிகாலையில் லேசான மழைபெய்த நிலையில், கழிவுநீா் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு திண்டுக்கல் சாலையில் வழிந்தோடிய கழிவுநீரால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கரூா் நகா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் லேசான மழை பெய்தது. தாந்தோணிமலை பகுதியில் பெய்த மழையில் மேடான பகுதிகளான கல்யாண வெங்கடரமணசுவாமி கோயில் தெரு, சவரிமுடித்தெரு, மில்கேட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஓடிய மழை நீா் கழிவுநீா் வாய்க்காலில் கலந்து சுங்ககேட் பகுதியில் அமராவதி ஆற்றுக்குச் செல்லும் வாய்க்காலில் கலக்கும் இடத்தில் திடீரென அடைப்பு ஏற்பட்டது.

இதனால், கழிவுநீா் வாய்க்காலில் இருந்து தண்ணீா் வெளியேறி திண்டுக்கல் சாலையில் ஓடியது. துா்நாற்றத்துடன் ஓடிய கழிவுநீருடன் கலந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கரூா் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரங்களுடன் வந்து கழிவுநீா்வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பை சுமாா் 2 மணித்துக்குப் பிறகு சரி செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com