உயிரிழந்த அண்ணாதுரை.
உயிரிழந்த அண்ணாதுரை.

கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற மகளை காப்பாற்ற குதித்த தந்தை உயிரிழப்பு

Published on

குளித்தலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற மகளை காப்பாற்ற குதித்த தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பாப்பக்காப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட குப்பனம்பட்டியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (55). இவரது 19 வயது மகளை திருமணத்துக்காக பெண் பாா்க்க அண்மையில் மாப்பிள்ளை வீட்டாா் வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், பெண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லையாம்.

இதுதொடா்பாக தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், விரக்தியடைந்த அண்ணாதுரையின் மகள் வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதைகண்ட அண்ணாதுரை மகளை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தாா். அப்போது அண்ணாதுரை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று கிணற்றுக்குள் சுவரை பிடித்துக்கொண்டு தத்தளித்துக்கொண்டிருந்த அண்ணாதுரையின் மகளை உயிருடன் மீட்டனா். தொடா்ந்து அண்ணாதுரையை சடலமாக மீட்டு உடற்கூறாய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com