குளித்தலை: கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி

குளித்தலையில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலியானார்.
மகள் தனலட்சுமியுடன் தந்தை அண்ணாதுரை.
மகள் தனலட்சுமியுடன் தந்தை அண்ணாதுரை.
Updated on
1 min read

குளித்தலையில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலியானார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பாப்பக்காப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பனம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(55). இவரது மகள் தனலட்சுமி(19). குடும்பப் பிரச்னை காரணமாக தனலட்சுமி ஞாயிற்றுக்கிழமை இரவு அருகிலுள்ள அவர்களது விவசாய பாசன கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனை அறிந்த தந்தை அண்ணாதுரை மகளைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். அப்போது அண்ணாதுரை மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கிணற்றில் குதித்த அண்ணாதுரை தண்ணீரில் மூழ்கினார். சம்பவம் அறிந்து அங்கு நள்ளிரவு விரைந்த குளித்தலை தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கிணற்றின் சுவரை பிடித்துக் கொண்டு தண்ணீரில் தத்தளித்த தனலட்சுமியை உயிருடன் மீட்டனர். இறந்த நிலையில் அண்ணாதுரையை சடலமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீஸார் சடலத்தை உடற்கூராய்விற்காக குளித்தலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த குளித்தலை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

மகள் தனலட்சுமியுடன் தந்தை அண்ணாதுரை.
அமலாக்கத் துறை நோட்டீஸுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
Summary

In Kulithalai, a father died while trying to save his daughter who attempted suicide by jumping into a well.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com