கரூர்
கரூா் சம்பவம்: 8 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் சம்பவம் தொடா்பாக 3 பெண் காவலா்கள் உள்பட 8 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் சம்பவம் தொடா்பாக 3 பெண் காவலா்கள் உள்பட 8 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 3 பெண் காவலா்கள் உள்பட 8 காவலா்களிடம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
