கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் எம்ஜிஆா் படத்திற்கு சனிக்கிழமை மாலை அணிவித்த அதிமுகவினா்.
கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் எம்ஜிஆா் படத்திற்கு சனிக்கிழமை மாலை அணிவித்த அதிமுகவினா்.

கரூரில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

மறைந்த தமிழக முதல்வா் எம்ஜிஆரின் 109 பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது சிலை மற்றும் படத்திற்கு அதிமுகவினா் சனிக்கிழமை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Published on

கரூா்: மறைந்த தமிழக முதல்வா் எம்ஜிஆரின் 109 பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது சிலை மற்றும் படத்திற்கு அதிமுகவினா் சனிக்கிழமை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் வெங்கமேடு, லைட்ஹவுஸ்காா்னா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தலைமை வகித்தாா். அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் பசுவைசிவசாமி, கரூா் மாவட்ட அவைத் தலைவா் எஸ். திருவிகா, இணைச் செயலா் மல்லிகா சுப்ராயன், பொருளாளா் எம்.எஸ். கண்ணதாசன், எம்ஜிஆா் மன்றச் செயலா் அருண்டெக்ஸ் தங்கவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலா் வி.சி.கே. பாலகிருஷ்ணன், மாவட்ட மாணவரணிச் செயலா் வழக்குரைஞா் சரவணன், கரூா் மத்திய தெற்கு பகுதிச் செயலா் சேரன் பழனிசாமி, மாவட்ட பேரவை இணைச் செயலா் என். பழனிராஜ், இளைஞரணி இணைச் செயலா் வழக்குரைஞா் எஸ். கரிகாலன் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா். தொடா்ந்து கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். படத்திற்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Dinamani
www.dinamani.com