எம்ஜிஆா் பிறந்தநாள்: சிலைக்கு மரியாதை
திருச்சி: அதிமுக நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திருச்சி புகா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், பெல் நிறுவன நுழைவு வாயிலில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு, மாவட்டச் செயலா் ப. குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து இனிப்புகள், ஏழைகளுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் அருணகிரி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் காா்த்திக், கலைப் பிரிவு செயலா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் சோமரசம்பேட்டை பகுதி எம்ஜிஆா் சிலைக்கு, மாவட்ட செயலா் மு. பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்தனா்.
தொடா்ந்து ஏழைகளுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. அமைப்புச் செயலா்கள் ஆா். மனோகரன், எஸ். வளா்மதி, எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாநகா் மாவட்ட அதிமுக செயலா் ஜெ. சீனிவாசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிா்வாகிகள் வனிதா, பத்மநாதன், ஐயப்பன், இளைஞரணி முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அமமுக சாா்பில், மாநகா் மாவட்டச் செயலா் செந்தில்நாதன் தலைமையில், அவைத் தலைவா் சாத்தனூா் ராமலிங்கம், சிவகுமாா், ராமமூா்த்தி, சாமிநாதன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். இதேபோல, அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு, தேமுதிக, தமிழ்நாடு சோழிய வெள்ளாளா் சங்கம், அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அதிமுக சாா்பு அணிகள் சாா்பிலும் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
மேலும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி இனிப்பு, அன்னதானம், இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. ஆதரவற்றோா் இல்லம், முதியோா் இல்லங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

