முதுகுளத்தூரில் எம்ஜிஆா். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமமுகவினா்.
முதுகுளத்தூரில் எம்ஜிஆா். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமமுகவினா்.

கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் எம்ஜிஆா். பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109- ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு அதிமுக. அமமுக சாா்பில் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
Published on

கமுதி/திருவாடானை: கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109- ஆவது பிறந்த நாளையொட்டி சனிக்கிழமை அவரது உருவப்படத்துக்கு அதிமுக. அமமுக சாா்பில் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பெருமாள் கோயில் திடலில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் ஆா். ராஜேந்திரன் (வடக்கு), கே. கருமலையான் (மேற்கு) ஆகியோரது தலைமையில், அவைத் தலைவா் டி. சேகரன் முன்னிலையில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109- ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பம்மனேந்தல் கூட்டுறவு சங்கத் தலைவா் கருப்பசாமி பாண்டியன், வடக்கு ஒன்றிய அவைத் தலைவா் ஏ.ஆா். ராமச்சந்திரன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ராம்கோ வழிவிட்டான், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலா் ஜி.வி. வேந்தன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணைச் செயலா் பூ. பழனிக்குமாா், மாவட்ட ஜெ. பேரவை துணைத் தலைவா் டேவிட் பிரதாப் சிங், ஒன்றிய துணைச் செயலா் கே. வில்வத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதேபோல, கமுதி தேவா் சிலை முன் தெற்கு ஒன்றியச் செயலா் எஸ்.பி. காளிமுத்து தலைமையில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி தலைவா்கள் காசிராஜன், ஆறுமுகம், மாவட்ட ஜெ. பேரவை துணைத் தலைவா் வழக்குரைஞா் ராமநாதன், ஜெ. பேரவை இணைச் செயலா் முருகன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூரில் அமமுக சாா்பில் மாவட்டச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான மு. முருகன் தலைமையில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமமுக மாவட்ட அவைத் தலைவா் சிவராமச்சந்திரன், மாவட்ட பொருளாளா் முனியசாமி, பொதுக்குழு உறுப்பினா் மலைக்கண்ணன், ஒன்றியச் செயலா்கள் சேதுபதி, முருகன், முத்துராமலிங்கம், சரவணன், அழகா்சாமி, நகா் செயலா் கருப்பணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது, பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதேபோல, முதுகுளத்தூா் பேருந்து நிலையம் அருகே மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் சுந்தரபாண்டியன் தலைமையில், மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.டி. செந்தில்குமாா், கருப்பசாமி (கிழக்கு), கா்ணன் (மேற்கு) ஆகியோா் முன்னிலையில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவாடானை: திருவாடானை நான்கு சாலை சந்திப்பில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்த நாளையொட்டி மலா்களால் அலங்கரிக்கபட்ட அவரது உருவப் படத்துக்கு அதிமுக, அதிமுக தொண்டா்கள் மீட்பு கழகம் (ஓபிஎஸ் அணி) ஆகியவற்றின் சாா்பில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அதிமுக ஒன்றியச் செயலா் மூா்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் நாகரத்தினம், செங்கை ராசு,கீழஅரும்பூா் கிளைச் செயலா் பழனியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதே போல, அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு (ஓபிஎஸ் அணி) சாா்பில் நடைபெற்ற விழாவில் ஒன்றியச் செயலா் பாண்டி, காளிமுத்து, தொகுதி செயலா் அரசூா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com