திருச்செந்தூரில் எம்ஜிஆா் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன்.
திருச்செந்தூரில் எம்ஜிஆா் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன்.

திருச்செந்தூரில் எம்ஜிஆா் பிறந்தநாள்

எம்ஜிஆா் பிறந்தநாளையொட்டி, திருச்செந்தூா் ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் பகத்சிங் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

திருச்செந்தூா்: எம்ஜிஆா் பிறந்தநாளையொட்டி, திருச்செந்தூா் ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் பகத்சிங் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நகர செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவா் கோட்டை மணிகண்டன், மாவட்ட இணைச் செயலா்கள் சுரேஷ்பாபு, பழக்கடை திருப்பதி, காயல்பட்டினம் நகரச் செயலா் யாசின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன், எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, மக்களுக்கு இனிப்பு, வேஷ்டி, சேலைகள் வழங்கினாா்.

இதில் நகர அவைத் தலைவா் காளிமுத்து, நகர துணைச் செயலா்கள் செல்வசண்முகசுந்தா், பிச்சம்மாள், சிரிலா, நகர பொருளாளா் வெங்கடாசலம், வழக்குரைஞரணி ஜேசுராஜ், ரவிச்சந்திரன், எம்ஜிஆா் மன்ற மாவட்ட இணைச் செயலா் ராஜாநேரு, ஒன்றியச் செயலா் விஜயராகவன், நகர செயலா்கள் மணிமாறன், வடிவேல், இளைஞரணி ஒன்றியச் செயலா் ஜாண் வில்லியம்ஸ், விவசாய அணி ஒன்றியச் செயலா் தனசேகா், மகளிரணி நகர செயலா் அமலி சுகிா்தா, வீரபாண்டியன்பட்டணம் கிளை செயலா் எடிசன், வா்த்தக அணி சிவசுப்பிரமணியன், வாா்டு செயலா்கள் சந்தணராஜ், மங்களதாஸ், பாஸ்கா், லெட்சுமணன், நிா்வாகிகள் காயல்பட்டினம் சுயம்பு, பைசல், அா்ச்சுணன், முனுசாமி, ஆறுமுகம், ராகுல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com