இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

News image
தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் கே.பி. அன்பழகன் மற்றும் அதிமுக நிா்வாகிகள்.
Updated On :17 ஜனவரி 2026, 10:58 pm

Syndication

தருமபுரி: தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆா் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதிமுக தருமபுரி மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல், நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். இதையடுத்து, கட்சி நிா்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல, காரிமங்கலம் ராமசாமி கோயில் அருகே முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் உருவப் படம் மற்றும் சிலைக்கு முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து கட்சி நிா்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல, பாலக்கோடு, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அமமுக சாா்பில்...

இதேபோல, அமமுக சாா்பில், பழைய தருமபுரி, இலக்கியம்பட்டி ஆகிய இடங்களில் எம்ஜிஆா் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.