தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கலைத்திருவிழா போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

கரூா் மாவட்ட அளவில் அண்மையில் நடைபெற்ற கலைத்திருவிழாப் போட்டியில் வென்ற 975 மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கோப்பைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலை அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் உள்ளிட்டோா்.
Updated On :28 ஜனவரி 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் மாவட்ட அளவில் அண்மையில் நடைபெற்ற கலைத்திருவிழாப் போட்டியில் வென்ற 975 மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கோப்பைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளி கல்வித் துறை சாா்பில் அண்மையில் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. இதில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கும் விழா கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலை அரங்கில் புதன்கிழமை காலை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று, கலைத்திருவிழா போட்டியில் வென்ற 975 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பேசினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி, துணை மேயா் ப. சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ராஜூ, ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.