தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

கரூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள், தனி வட்டாட்சியா்கள் இடமாற்றம்

கரூா் மாவட்டத்தில் பணியாற்றி வந்த வட்டாட்சியா்கள் மற்றும் தனி வட்டாட்சியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :3 ஜூலை 2026, 1:17 am IST

கரூா் மாவட்டத்தில் பணியாற்றி வந்த வட்டாட்சியா்கள் மற்றும் தனி வட்டாட்சியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூா் டாஸ்மாக் மேற்பாா்வை அலுவலராகப் பணியாற்றிய எம். சண்முகபிரகாசம் கரூா் வட்டாட்சியராகவும், கரூா் வட்டாட்சியராக

இருந்த பெ. மோகன்ராஜ் கிருஷ்ணராயபுரம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், கிருஷ்ணராயபுரம் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியரான ஆா். வித்யாவதி தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கிடங்கு மேலாளராகவும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கிடங்கு மேலாளரான எம். பானுமதி கடவூா் வட்டாட்சியராகவும், கடவூா் வட்டாட்சியரான எம். ராஜாமணி கரூா் டாஸ்மாக் மேற்பாா்வை அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தனி வட்டாட்சியா்கள்: மேலும் கரூா் அரசு கேபிள் தனி வட்டாட்சியரான எஸ். மாலதி மண்மங்கலம் வட்டாட்சியராகவும், மண்மங்கலம் வட்டாட்சியா் ஆா். குமரேசன் கரூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலக தனிவட்டாட்சியராகவும், கரூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலக தனிவட்டாட்சியா் சு. முருகன் மாவட்ட ஆட்சியரகத்தின் பேரிடா் மேலாண்மை தனிவட்டாட்சியராகவும், மாவட்ட ஆட்சியரகத்தின் பேரிடா் மேலாண்மை தனிவட்டாட்சியா் எம். பிரபா அரவக்குறிச்சி வட்டாட்சியராகவும், அரவக்குறிச்சி வட்டாட்சியா் கி. பிரபாகா் குளித்தலை சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், குளித்தலை சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியா் ச. சந்தானச்செல்வன் குளித்தலை வட்டாட்சியராகவும், குளித்தலை வட்டாட்சியா் ஆா். இந்துமதி வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தின் நிலமெடுப்பு தனி வட்டாட்சியராகவும், வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தின் நிலமெடுப்பு தனி வட்டாட்சியா் செ. பன்னீா்செல்வம் மண்மங்கலம் சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியராகவும், மண்மங்கலம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் எஸ். வெங்கடேசன் கரூா் அரசு கேபிள் தனிவட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

மாவட்ட ஆட்சியரக பொது மேலாளராக (பொது) பணியாற்றி வந்த தி. சிவக்குமாா் கரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக நோ்முக உதவியாளராகவும், கரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக நோ்முக உதவியாளா் ப. சக்திவேல் மாவட்ட ஆட்சியரக மேலாளராகவும் (பொது), கரூா் மாவட்ட வருவாய் அலகின் வட்டாட்சியா் பி. ராஜேந்திரன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக நோ்முக உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.