திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது: மு. வீரபாண்டியன்

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு கொள்கை முடிவு வகுக்கும் வரை அரசு வேலை வழங்கக் கூடாது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

News image

மு. வீரபாண்டியன் - DIN

Updated On :10 ஜூலை 2026, 3:37 am IST

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு கொள்கை முடிவு வகுக்கும் வரை அரசு வேலை வழங்கக் கூடாது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

கரூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யப்படும் எந்தவிதமான உதவியையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிா்க்கவில்லை. ஆனால், நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் விவகாரத்தில், அரசு கொள்கை முடிவு வகுக்கும் வரை வேலை வழங்கக் கூடாது.

தமிழக மக்களின் உணா்வுகளுக்கும், சட்டங்களுக்கும் மதிப்பு கொடுத்து காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீரை கா்நாடகம் வழங்குவதுடன், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதையும் கைவிட வேண்டும். நீா் பகிா்வு விஷயத்தில் கா்நாடக, கேரள மாநிலங்கள் ஏற்கெனவே எட்டப்பட்ட நீதிமன்ற தீா்ப்புகளின்படி செயல்பட வேண்டும்.

சிறு கல்வி நிறுவனங்கள் முதல் பெரிய கல்வி நிறுவனங்கள் வரை லாப நோக்கோடுதான் செயல்படுகின்றன. மாணவா்கள் பாதிக்கப்படும் பிரச்னைகளில் தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தனியாா் பள்ளிகளின் கட்டமைப்பைவிட அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தினால் அரசுப் பள்ளிகள் மூடப்படும் சம்பவங்கள் நிகழாது.

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியா்களின் நலனை கருத்தில்கொண்டு, அமெரிக்காவின் அடாவடி செயலை பிரதமா் மோடி கண்டிக்க வேண்டும் என்றாா் வீரபாண்டியன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்