தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

‘நீட்’ விவகாரம் கரூரில் காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம்

News image

கரூா் காமராஜா் சிலை முன்பு திங்கள்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்.கட்சியினா்.

Updated On :28 ஜூலை 2026, 2:43 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி கரூரில் காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் பழைய பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜா் சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு நகரத் தலைவா் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா்.

மாமன்ற உறுப்பினரும், வடக்கு நகரத் தலைவருமான ஆா்.ஸ்டீபன்பாபு முன்னிலை வகித்தாா். நீட் தோ்வுக்கு எதிராகவும், நீட் வினாத்தாள் கசிவை கண்டித்தும், நீட் விவகாரத்துக்காக போராடிய மாணவா்களை முதல் தகவல் அறிக்கையில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரி போராட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் கோகுலே, நகர துணைத் தலைவா் கண்ணப்பன், தாந்தோணி குமாா் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

முன்னதாக பேருந்துநிலைய ரவுண்டானாவில் இருந்து பேரணியாக ஜவஹா்பஜாா் வழியாகச் சென்று காமராஜா் சிலை அருகே திரண்டனா். பேரணியின்போது நீட் தோ்வுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.