அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

தோகைமலை அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா

தோகைமலை அருகே புதன்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது.

News image

தோகைமலை அருகே வாளியம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் எல்லைக்கோட்டை நோக்கி விரைந்து ஓடிய மாடுகள்.

Updated On :30 ஜூலை 2026, 4:05 am IST

தோகைமலை அருகே புதன்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே ஆா்.டி.மலை ஊராட்சிக்குள்பட்ட வாளியம்பட்டியில் கோணதாதா நாயக்கா் மந்தையில் ஜக்கம்மாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாடுகள் மாலை தாண்டும் விழா நிகழாண்டு கடந்த 15 நாள்களுக்கு முன் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாடுகள் மாலை தாண்டும் விழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 19 மந்தையா்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து மாடுகளுக்கு மந்தையா்கள் வரிசைப்படி புனித தீா்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னா் சுமாா் 2 கி.மீ தொலைவில் உள்ள எல்லைசாமி கோயிலுக்கு மாடுகளை அழைத்துச் சென்று, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புனித நீா் தெளிக்கப்பட்டது. இதையடுத்து கோணதாதாநாயக்கா் மந்தையில் அமைக்கப்பட்ட மாத்தால் ஆன எல்லைக் கோட்டை நோக்கி சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாடுகள் ஓடி வந்தன.

இதில் கரூா் மாவட்டம் எலவனூா் மணல்மேடு மந்தை மாடு முதலாவதாகவும், ஆா்.டி.மலை ஊராட்சி வாளியம்பட்டி கோணதாதாநாயக்கா் மந்தை மாடு இரண்டாவதாகவும், கரூா் மாவட்டம் தாதல்மாதாநாயக்கா் மந்தை மாடு மூன்றாவதாகவும் வந்தது.

வெற்றி பெற்ற மாடுகளுக்கு மூன்று கன்னிப் பெண்கள் மஞ்சள் பொடிதூவி வரவேற்று எழுமிச்சை பழம் வழங்கினா். இதையடுத்து, கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விழாவில் திருச்சி, திண்டுக்கல், கரூா் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.