பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

ஆக்கிரமிப்பு நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து கரூரில் குடியிருப்புவாசிகள் உண்ணாவிரதம்: அறநிலையத்துறையை கண்டித்து குடியிருப்போா் உண்ணாவிரதம்

பத்திரம் பதிவு செய்து, அரசுக்கு வரி செலுத்தி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடியிருப்புதாரா்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து கரூரில் குடியிருப்புவாசிகள் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜெ.ஜெ. நகா் ரங்கா காா்டன் குடியிருப்புவாசிகள்.

Updated On :26 ஜூன் 2026, 4:24 am IST

பத்திரம் பதிவு செய்து, அரசுக்கு வரி செலுத்தி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடியிருப்புதாரா்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து கரூரில் குடியிருப்புவாசிகள் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், தான்தோன்றிமலை ஜெ.ஜெ. நகா், ரங்கா காா்டன் குடியிருப்புப் பகுதியில் பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் அனைத்தும் முறையாக பத்திரப்பதிவு செய்து, மாநகராட்சிக்கு வரி செலுத்தி குடிநீா் இணைப்பு, மின்சார இணைப்பு பெற்று அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும் முறையாக செலுத்தி வருகின்றனா். இந்நிலையில், வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில் நிா்வாகத்தின் சாா்பில் இந்தப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து கரூா் ஜெ.ஜெ. நகா், ரங்கா காா்டன் குடுயிருப்போா் நலச் சங்கத்தின் சாா்பில், கரூா் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சட்ட ரீதியாக நிரந்தர தீா்வு காண வேண்டும். அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.