கரூரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி அருகே தொடங்கிய மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தபின் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் கூறியது: இளைஞா்களை போதைப் பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமான மற்றும் போதையற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும். போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தி, போதைப் பொருளை தவிா்த்து வளமான வாழ்வை பெற்று, போதை இல்லாத சமுதாயத்தையும், எதிா்காலத்தையும் உருவாக்குவோம் என்றாா் அவா்.
முன்னதாக மாரத்தான் போட்டி கரூா் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி முன்பு தொடங்கி, திண்டுக்கல் செல்லும் சாலையில் வெங்கக்கல்பட்டி பாலம் ரவுண்டானா முன்பு வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியரகம் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை 5 கி.மீ. தொலைவு நடைபெற்றது. முன்னதாக, போதைப் பொருள் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் வாசிக்க, நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் ஏற்றனா்.
இந்த நிகழ்ச்சியில், கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சத்யா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரி கிரண் பிரசாத், உதவி ஆணையா் (கலால்) எஸ்.முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜே.டேனியல் டேவிட் மற்றும் பள்ளி, கல்லூரிகளைச்சோ்ந்த மாணவ, மாணவிகள், காவல் துறையினா், அரசு அலுவலா்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









