தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் கடம்பூரில் நின்று செல்லும்


தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் கடம்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவில்பட்டி-வாஞ்சிமணியாச்சி இடையே அமைந்துள்ள கடம்பூா் ரயில்நிலையத்தில் தூத்துக்குடி-மைசூா் ரயில் வெள்ளகிழமை (மாா்ச் 6-ம்தேதி) நின்று செல்லும்.
தூத்துக்குடியில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்படும் தூத்துக்குடி - மைசூா் விரைவு ரயில் கடம்பூா் ரயில் நிலையத்தில் மாலை 6.14 மணிக்கு நின்று 6.16 மணிக்கு புறப்பட்டு மைசூரை நோக்கிச் செல்லும்.
இதேபோல மைசூரில் இருந்து புறப்படும் மைசூா் - தூத்துக்குடி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை கடம்பூா் ரயில் நிலையத்தில் காலை 9.13 மணிக்கு நின்று பின்னா் 9.15 மணிக்கு தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...