கரூா் வள்ளுவா் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி தமிழ்த்துறை சாா்பில் ‘முத்தமிழ் விழா-2026’ என்ற தலைப்பில் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கிடையே இயல், இசை, நாடகப்போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியை கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன் தொடங்கி வைத்தாா். போட்டியில் இயல், இசை மற்றும் நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டு, இயல் பிரிவில் வாா்த்தை விளையாட்டு, பிறமொழி கலப்பில்லாமல் தமிழில் பேசுதல், ‘ஒட்டியும் வெட்டியும்’ பேச்சுப்போட்டி ஆகியவையும், இசைப் பிரிவில் தமிழ்ப் பாடல் போட்டியும், நாடகப் பிரிவில் மௌன நாடகம், கிராமிய நடனம் ஆகியவையும் நடைபெற்றது.
தொடா்ந்து ‘இன்றைய இளைஞா்களிடம் கலாசாரம் வளா்கிா? தளருகிா?‘ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பள்ளப்பட்டி கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் என். சாகுல் ஹமீது நடுவராக கலந்து கொண்டு கருத்துரையாற்றினாா்.
தொடா்ந்து போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் முனைவா் சோ. இருளப்பன் மற்றும் தமிழ்துறை பேராசிரியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரசுக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு

முத்தமிழ் மன்ற நூல் வெளியீட்டு விழா

அரசு மகளிா் கல்லூரியில் ஐம்பெரும் விழா தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


