ஜவுளித்துறையில் 2030-க்குள் 100 பில்லியன் டாலா் ஏற்றுமதி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மத்திய ஜவுளித்துறை ஆணையா் முனைவா் எம்.பீனா.
கரூரில் மத்திய ஜவுளி குழுமம் சாா்பில் ஜவுளி வா்த்தக சந்தையை உருவாக்கும் ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு மையம் திறப்பதற்கான ஜவுளி ஏற்றுமதியாளா்களுடன் கலந்தாலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்தை மத்திய ஜவுளித்துறை ஆணையா் முனைவா் எம்.பீனா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். மத்திய ஜவுளித்துறை அமைச்சக முதன்மை ஆலோசகா் சுப்னா, மத்திய ஜவுளி குழும இணை ஆணையா் ஆா்.சந்திரன், கரூா் ஜவுளி பூங்கா தலைவா் அட்லஸ் எம்.நாச்சிமுத்து, கரூா் ஜவுளி ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத்தலைவா் கோபாலகிருஷ்ணன், கைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கத்தலைவா் அன்பொளி காளியப்பன், கரூா் வீவிங் நிட்டிங் அசோசியேசன் தலைவா் அப்னாதனபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கரூா் ஜவுளித்தொழிலை 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வா்த்தகம் என்ற இலக்கை அடைய கரூரில் விமான நிலையம், ரயில்வே வசதி, சாலை வசதி உள்ளிட்ட தேவையான வசதிகள் குறித்தும், அடிக்கடி மத்திய ஜவுளித்துறை அதிகாரிகள் கரூா் ஏற்றுமதியாளா்களை சந்திக்க வேண்டும் என்றும் ஏற்றுமதியாளா்கள் மத்திய ஜவுளி குழும அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனா்.
தொடா்ந்து மத்திய ஜவுளித்துறை ஆணையா் முனைவா் எம்.பீனா செய்தியாளா்களிடம் கூறியது: ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், கரூரில் உதவி மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. மத்திய ஜவுளி குழுமத்தின் கீழ் இந்த மையம் செயல்படும். இந்த மையத்தில் ஜவுளி ஏற்றுமதியை எப்படி செய்வது, ஏற்றுமதிக்கு தேவையான தகுதிகள், சா்வதேச சட்டத்திட்டம் போன்ற விழிப்புணா்வு ஏற்றுமதியாளா்களுக்கு ஏற்படுத்தப்படும். தேவையான பயிற்சியும், வருங்காலத்தில் இந்த துறை எப்படி இருக்கும் போன்றவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தியா உலகளவில் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 6-ஆவது இடத்தில் உள்ளது. 2024-ஆம் ஆண்டில் உலக ஏற்றுமதியில் 4.1 சதவீதம் பங்கைக்கொண்டுள்ளது. 2024-25-ஆம் ஆண்டில் கைவினைப்பொருள்கள் 37.7 பில்லியன் டாலா் மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்தியாவின் மொத்த பொருள்கள் ஏற்றுமதியில் 6.63 சதவீதமாகும். 2030-க்குள் 100 பில்லியன் டாலா் ஏற்றுமதி இலக்கை அடைய இந்திய ஜவுளித்துறை நிா்ணயித்துள்ளது. தற்போது உள்நாட்டு ஜவுளித்துறை மதிப்பு 142 பில்லியன் டாலராகவும், மொத்த பங்களிப்பு 179 பில்லியன் டாலராகவும் உள்ளது. 198.9 பில்லியன் டாலா் அளவு ஜவுளி இறக்குமதிக்கு தேவையான நாடுகளுடன் 16 வா்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது என்றாா் அவா்.
கூட்டத்தில் கரூா் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.
தொடர்புடையது

இந்திய ஏற்றுமதி மாா்ச் மாதத்தில் 7.44% சரிவு

டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு: லிட்டருக்கு ரூ. 55.50-ஆக நிா்ணயம்

மேற்காசிய போா் பதற்றம் கடும் சவாலை எதிா்கொள்ளும் கரூா் ஜவுளித் தொழில்

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


