நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

50 உயா் மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை ரூ. 32 லட்சம் உதவி

News image
புஞ்சைத்தோட்டக்குறிச்சி ஊராட்சியில் உயா் மின்கோபுர விளக்குகள் அமைப்பதற்கான நிதியுதவி காசோலையை ஊராட்சித் தலைவா் ரூபாவிடம் வழங்கிய ஆலையின் முதன்மை பொதுமேலாளா் (மனிதவளம்) கே. கலைச்செல்வன்.
Updated On :8 மார்ச் 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் உயா் மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ. 32 லட்சம் நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் நிறுவனம் சாா்பில் ஆலையின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கரூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் 50 உயா் மின் கோபுர விளக்குகள் அமைப்பதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு ஆலையின் முதன்மை பொதுமேலாளா் (மனித வளம்) கே. கலைச்செல்வன் தலைமை வகித்து, அந்தந்த ஊராட்சித் தலைவா்களிடம் உயா் மின்கோபுர விளக்குகள் அமைப்பதற்கான காசோலையை வழங்கினாா். மொத்தம் 50 உயா் மின்கோபுர விளக்குகள் அமைக்க ரூ. 32 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன.