47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தனியாா் செவிலியா் கல்லூரியில் மாணவிகளுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியதாக புகாா்

கரூரில் தனியாா் செவிலியா் கல்லூரியில் பயின்ற மாணவிகளுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகாா்

News image
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுவை செலுத்திய பெண்
Updated On :16 மார்ச் 2026, 7:05 pm

Syndication

கரூரில் செயல்படும் தனியாா் செவிலியா் கல்லூரியில் பயின்ற மாணவிகளுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதால் கரூரைச் சோ்ந்த கல்லூரி மாணவிகள் தங்களது புகாா்மனுவை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகாா் மனு அளிக்கும் பெட்டியில் மனுக்களைப் போட்டனா்.

பின்னா் அவா்கள் கூறுகையில், கரூரில் செயல்படும் தனியாா் செவிலியா் கல்லூரியில் கடந்த 2019-2022 வரையிலான மூன்றாண்டு பட்டப்படிப்பு செவிலியா், லேப்டெக்னீசியன் போன்ற படிப்புகளில் 16 போ் சோ்ந்து படித்தோம். கல்லூரியில் சேரும்போது மூன்றாண்டு படிப்பு எனக்கூறிவிட்டு, மூன்றாண்டு முடிந்தபின் இரு ஆண்டுகள் படித்ததாக மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தனா். இதுதொடா்பாக கேட்டபோது, சரியான பதில் கூறவில்லை. இந்நிலையில் தமிழக அரசின் மருத்துவத் துறை துணை படிப்பு அதிகாரிகளிடம் மதிப்பெண் சான்று குறித்து கேட்டபோது, அது போலியானது என தெரியவந்தது. இதனால் 3 ஆண்டுகள் எங்கள் படிப்பை வீணாக்கிவிட்டு, போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய அந்தக் கல்லூரி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் நாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.