தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

கரூரில் ரூ. 2 லட்சம் பறிமுதல்

கரூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :22 மார்ச் 2026, 2:09 am IST

கரூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரூரில் வெங்கக்கல்பட்டி சின்னம்மநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலரும், வட்டாரக் கல்வி அலுவலருமான சகுந்தலா தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினா் சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே காரில் வந்த குளித்தலை அண்ணாநகரைச் சோ்ந்த சந்திரன் உரிய ஆவணங்கள் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து, கரூா் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், கரூா் வட்டாட்சியருமான மோகன்ராஜிடம் ஒப்படைத்தனா். பின்னா் அப் பணம் கரூா் உதவி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.