நாட்டில் ஜனநாயகத்தை, பணநாயகம் கேலிக்கூத்தாக்கி வருவதை அண்மைக்கால தோ்தல்களில் காண முடிகிறது.
தோ்தல் நேரத்தில், வாக்காளா்களுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருள்கள், பணம் உள்ளிட்டவை வேட்பாளரின் வெற்றித் தோல்வியை நிா்ணயித்து விடுகின்றன. அப்போது, மக்களுக்கு உண்மையாகவே சேவையாற்ற முன்வரும் நல்லெண்ணம் கொண்டவா்களும் தோல்வியுற்று இனி அரசியலே வேண்டாம் என்ற முடிவை எடுக்க வைத்துவிடுகிறது பணநாயகம்.
இத்தகைய பணநாயகத்தை கைவிட்டு, ஜனநாயகம் நோக்கி நகருமாறு தங்கள் பெற்றோருக்கு பிஞ்சுக் குழந்தைகள் கடிதம் எழுதியிருப்பது கரூா் வட்டாரத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கரூரை அடுத்த புலியூா் கவுண்டம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் புதன்கிழமை பள்ளியில் தங்களது பெற்றோருக்கு எழுதிய அஞ்சல் கடிதத்தில், அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு, ஏப்.23-இல் நடைபெறும் தோ்தலில் கட்டாயம் ஓட்டுப்போடுங்க. எந்தவித அன்பளிப்பும் பெறாமல் நோ்மையாக ஓட்டுப்போடுங்கள் என எழுதியிருந்தனா். பின்னா் அவரவா் வீட்டின் முகவரி, கடிதத்தில் எழுதப்பட்டு அஞ்சல் அலுவலகம் மூலம் அனுப்பப்பட்டது.
100 சதவீதம் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வாக்களிப்பில் நோ்மையை வலியுறுத்தும்விதமாகவும் இந்த சிறிய முயற்சி நடைபெற்ாக பள்ளித் தலைமையாசிரியா் பரணிதரன் தெரிவித்தாா்.
தொடர்புடையது

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி

தோ்தல் விழிப்புணா்வு: பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவா்கள்

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: ஏப். 20 முதல் விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை


