இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

தென்னிலை அருகே தாழ்வான மின் கம்பிகளால் விபத்து அபாயம்

தென்னிலை அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்.

News image

தென்னிலை அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்.

Updated On :8 மே 2026, 5:25 am IST

தென்னிலை அருகே தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனே அதைச் சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், தென்னிலை கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பாளையம் கிராமத்தில் பெரும்பாலான இடங்களில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்கின்றன. இதனால் வயல்களில் அறுவடை செய்யப்படும் வைக்கோலை டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது வைக்கோல்போா் மீது மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் அச்சத்தில் அப்பகுதி விவசாயிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறுகையில், காட்டுப்பாளையத்தில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் மழைக்காலத்தில் பேரிடா் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்திலே சென்று வருகிறோம். மேலும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், விவசாய நிலங்களுக்கும் அச்சத்துடன் சென்று வருகிறோம்.

மேலும் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் குறித்து தென்னிலை மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தெரிவித்துவிட்டோம். விரைவில் காற்றடிக்கும் காலம் தொடங்கும் முன் சீரமைத்து தரவேண்டும். இல்லையேல் கிரா மமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனா் அவா்கள்.