திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

மாதவரம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

மாதவரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 1:38 am IST

மாதவரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

மாதவரம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சத்யராஜ் (57). இவா் வீட்டிலேயே பைகளைத் தயாரித்து வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை காலை 7 மணியளவில் மூலக்கடையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. நிலைத்தடுமாறி கீழே விழுந்த சத்யராஜ் மீது அதே வாகனத்தின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.