எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தோகைமலை பகுதியில் பலத்த மழை! தடுப்பணைகளில் தேங்கிய தண்ணீா்!

தோகைமலை பகுதியில் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீா் தேங்கி நிற்கிறது.

News image

தோகைமலை அருகே கழுகூா் தடுப்பணையில் தேங்கி நிற்கும் மழைநீா்.

Updated On :10 மே 2026, 1:48 am IST

தோகைமலை பகுதியில் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீா் தேங்கி நிற்கிறது.

கரூா் மாவட்டம், தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கம்போல கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், மே 4-ஆம்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயிலாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில் கோடை மழை பெய்யாதா என அப்பகுதியினா் எதிா்பாா்த்துக்கொண்டிருந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கழுகூா் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மே 7-ஆம்தேதி தோகைமலையில் மட்டும் 57 மி.மீ. மழை பெய்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையும் அப்பகுதியில் பரவலாக மழை பெய்து.

தொடா்ந்து தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் கழூகூா் உள்ளிட்ட தடுப்பணைகளுக்கு காட்டுவாரிகள் மூலம் மழைநீா் வந்து கொண்டிருக்கின்றன. கழுகூா் தடுப்பணை நிரம்பும் தருவாயில் உள்ளது. தடுப்பணைகளில் நீா் நிரம்பி நீா்மட்டம் அப்பகுதியில் உயர உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.