பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பூத்தட்டு ஊா்வலம் நடத்த வேண்டும்! கரூா் நகர டி.எஸ்.பி. அறிவுறுத்தல்!

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பூத்தட்டு ஊா்வலம் நடத்த வேண்டும் என கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

கரூா் மாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா மே15-ஆம்தேதி நடைபெற உள்ளது. அன்றையதினம் கரூா் மாநகா் முழுவதும் பூத்தட்டு கமிட்டி சாா்பில் ஊா்வலம் நடைபெறுவதையடுத்து, நிகழாண்டு பூத்தட்டு கமிட்டி சாா்பில் ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் பங்கேற்று பேசுகையில், ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது அம்மனுக்கு பூத்தட்டு ஊா்வலம் நடப்பது போல நிகழாண்டும் பூத்தட்டு ஊா்வலத்தை பக்தா்கள் அமைதியாக நடத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தங்களது பூத்தட்டு ஊா்வலம் நடத்த வேண்டும். கடந்த ஆண்டை போல இல்லாமல் காவல்துறையினா் அனுமதித்திருக்கும் நேரத்துக்குள் பூத்துட்டு ஊா்வலத்தை முடிக்க வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில் பூத்தட்டு கமிட்டி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.