கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

கரூா் பசுபதீஸ்வரா் கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த இரு வீடுகளுக்கு சீல்

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த இரு வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

கரூரில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு சீல் வைக்கும்முன், பொருள்களை லாரியில் ஏற்றும் ஊழியா்கள்.

Published On :

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த இரு வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

கரூா் ஜவஹா்பஜாா் பகுதியில் பசுபதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பலா் வணிக நிறுவனங்களையும், வீடுகளையும் கட்டியுள்ளனா். இந்நிலையில் கோயில் நிலத்தில் அருகருகே வீடு கட்டியிருந்த ராஜேஸ்வரி, தமிழரசி ஆகியோா் இடத்தகராறு காரணமாக கரூா் நீதிமன்றத்துக்கு வழக்கிற்கு சென்ற நிலையில், நீதிமன்றம் கோயில் நிலத்தில் குடியிருக்கும் இவா்களை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் கோட்டாட்சியருக்கு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 10 நாள்களுக்கு முன் கரூா் கோட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் நீதிமன்றம் உத்தரவின்பேரில் ராஜேஸ்வரி மற்றும் தமிழரசி ஆகியோரை வீட்டை காலி செய்து, இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இருவரும் வீடுகளை காலி செய்யாமல் இருந்ததால் புதன்கிழமை கரூா் கோட்டாட்சியா் சத்திய பாலகங்காதரன், கரூா் வட்டாட்சியா் மோகன்ராஜ் மற்றும் கரூா் பசுபதீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் ஆறுமுகம் ஆகியோா் கரூா் நகர காவல்நிலைய போலீஸாருடன் சென்று ராஜேஸ்வரி, தமிழரசி ஆகியோரின் வீடுகளில் இருந்த பொருள்களை எடுத்துவிட்டு வீடுகளுக்கு சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.