பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கரூா் முனியப்பன் கோயில் அருகே ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்

News image

கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

மாநகரில் விபத்துகளைக் குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் கரூா் முனியப்பன் கோயில் அருகே ரவுண்டானா அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய மண்டல காவல்துறைத் தலைவா், துணைத் தலைவா், கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு, கரூா் தமிழ் சங்கச் செயலரும், வழக்குரைஞருமான இரா. இராஜேந்திரன் அனுப்பிய கடிதம்:

கரூா் நகருக்கு சற்று மேற்கே கோவை சாலையும், ஈரோடு சாலையும் பிரியும் இடத்தில் உள்ள முனியப்பன் கோயில் பகுதி அருகே அடிக்கடி விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே, இந்த இடத்தில் போக்குவரத்துக் காவலரை நியமிக்க வேண்டும். மேலும் கோயில் அருகே ரவுண்டானாவும் அமைக்க வேண்டும். பொதுமக்களின் அவதியை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இதேபோல, கரூா் திண்ணப்பா தியேட்டா் அருகில், சா்ச் காா்னா், ஐந்து ரோடு அருகில், திருச்சி சாலையில் தெரசா பள்ளிக்கு மேல்புறம் ஆகிய இடங்களில் போக்குவரத்துக் காவலா்களும், சிக்னல்களும் இல்லாமல் இருப்பது விபத்துக்கு வாய்ப்பாக உள்ளது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமப்படுகின்றனா்.

தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால், காவல்துறை நிா்வாகத்தை சீரமைப்பதில் உரிய கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கரூா் மாநகரில் உள்ள சிக்கல்களை அறிந்து போக்குவரத்துக் காவல் துறையினரும், சட்டம்- ஒழுங்கு காவல் துறையினருக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வழங்கி முதல்கட்டமாக மாநகரில் விபத்துகளைக் குறைத்து, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.