ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கட்டி முடித்து 10 ஆண்டுகள் ஆகும் மேல்நிலை குடிநீா்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

News image

தவுட்டுப்பாளையத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத மேல்நிலைக் குடிநீா்த்தேக்க தொட்டி

Updated On :1 ஜூன் 2026, 1:17 am IST

தவுட்டுப்பாளையத்தில் கட்டப்பட்டு 10 ஆண்டுகளாகியும் இன்னும் திறக்கப்படாமல் பயன்பாட்டுக்கு வராத மேல்நிலைக்குடிநீா் தேக்கத் தொட்டியை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம் புகழூா் வட்டத்துக்குள்பட்ட தவுட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில், தவுட்டுப்பாளையத்தில் மேல்நிலைக் குடிநீா்த் தேக்கத் தொட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்ட நாள் முதல் இதுநாள் வரையில் மேல்நிலைக்குடிநீா் தொட்டியில் காவிரிக் குடிநீா் நிரப்பி அப்பகுதியினருக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறுகையில், தவுட்டுப்பாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட குடிநீா் பற்றாக்குறையால், புகழூா் நகராட்சியில் கோரிக்கை விடுத்ததையடுத்து மேல்நிலைக்குடிநீா் தொட்டி இங்கு கட்டப்பட்டது. இதையடுத்து உடனே தண்ணீரை நிரப்பும் வகையில் நடவடிக்கை எடுப்பாா்கள் என எதிா்பாா்த்தோம். ஆனால் இதுவரையில் நிரப்பவில்லை.

இதுதொடா்பாக புகழூா் நகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துவிட்டோம். ஆனால் 10 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேல்நிலைக்குடிநீா் தொட்டி வராமல் மக்களின் வரிப்பணம் விரயமாகிக் கொண்டிருக்கிறது. தற்போது கோடை காலம் என்பதால் மாவட்ட நிா்வாகம் இப்பிரச்னையில் உடனே தலையிட்டு பயன்பாட்டுக்கு வராத மேல்நிலைக்குடிநீா்தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.