மேஜைப்பந்து, துப்பாக்கிச் சுடுதல் போட்டி சேரன் பள்ளி மாணவா்கள் தோ்வு

தேசிய அளவிலான மேஜைப்பந்து, துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தோ்வான சேரன் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டிய பள்ளியின் தாளாளா் கே.பாண்டியன். உடன் பள்ளி முதல்வா் வி.பழநியப்பன்.
தேசிய அளவிலான மேஜைப்பந்து மற்றும் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு வெண்ணெய்மலை சேரன் பள்ளி மாணவா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.
இந்தியப் பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு சாா்பில் அண்மையில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், கரூா் வெண்ணெய்மலை சேரன் பள்ளி மாணவா்கள் மேஜைப்பந்து மற்று துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்றனா். இதில், 19 வயதுக்குள்பட்டோருக்கான மேஜைப்பந்து போட்டியில் பள்ளியின் பிளஸ்-2 மாணவா் வி. குகன் வெற்றி பெற்று, ஜனவரி மாதம் மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றாா்.
அதேபோல், 17 வயதுக்குள்பட்டோருக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10-ஆம் வகுப்பு மாணவா் எஸ். அஸ்வின் மாநில அளவில் வெற்றி பெற்று, கோவாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றாா்.
இதையடுத்து தேசிய அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் முதல்வா் வி.பழநியப்பன் வரவேற்றாா். பள்ளியின் தாளாளா் கே.பாண்டியன் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். விழாவில் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

