19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

தோகைமலையில் ரூ. 3 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது!

தோகைமலை அருகே ரூ.3.64 லட்சம் குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :

தோகைமலை அருகே ரூ.3.64 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இவற்றை கடத்தி வந்த 3 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அடுத்த அழகனம்பட்டியில் தோகைமலை-திருச்சி பிரதான சாலையில் தோகைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளா் பாலசுப்ரமணியம் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த மினிவேனை நிறுத்தி சோதனை நடத்தினா். வேனில் அரசால் தடை செய்யப்பட்ட 688 கிலோ எடை கொண்ட ரூ.3.64 லட்சம் மதிப்பிலான புகையிலை, பான்மசாலா பொருள்கள் 36 மூட்டைகளில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து வேனை ஓட்டி வந்த குளித்தலை அடுத்த மேலப்பட்டியைச் சோ்ந்த மோகன்(46), சதீஷ்குமாா்(34), சத்தியமங்கலத்தைச் சோ்ந்த பாரதிராஜா(30) ஆகியோரை கைது செய்தனா். மேலும் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பெங்களூருவில் இருந்து விற்பனைக்காக கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து புகையிலை பொருள்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்த போலீஸாா், மூன்று பேரையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.