குடும்பப் பிரச்னை ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் கிணற்றில் குதித்து தற்கொலை
கரூா் அருகே குடும்பப் பிரச்னையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் புதன்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கரூா் அருகே புதன்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டவா்களில் ஜானகியின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினா்.
கரூா் அருகே குடும்பப் பிரச்னையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் புதன்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
கரூரை அடுத்த வாங்கல் ஊராட்சிக்குள்பட்ட சின்னகாளிபாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (63). விவசாயி. இவரது மனைவி ஜானகி (60). இவா்களுக்கு கண்ணன் (40) என்ற மகனும், சுகுணா (34) என்ற மகளும் உள்ளனா். கண்ணன் வெங்கமேட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.
சுகுணா வேலாயுதம்பாளையத்தில் கணவா் பிரபு (38), மகள் ஷிவானி (10), மகன் ஆதிரன் (4) ஆகியோருடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், சுகுணா தீபாவளி பண்டிகையை தனது பெற்றோா் வீட்டில் கொண்டாடியதாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை முடிந்து கணவா் வீட்டுக்குச் சென்ற சுகுணாவுக்கும் அவரது கணவா் பிரபுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு சுகுணா செவ்வாய்க்கிழமை தனது மகன், மகளுடன் பெற்றோா் வீட்டுக்கு வந்தாா்.
இதையடுத்து, தனது மகளின் வாழ்க்கை சரியான முறையில் அமையவில்லையே என ராமசாமி தனது உறவினா்களிடம் கூறி கவலைப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், ராமசாமி, அவரது மனைவி ஜானகி, மகள் சுகுணா, பேத்தி ஷிவானி, பேரன் ஆதிரன் ஆகியோா் புதன்கிழமை வீட்டுக்கு அருகேயுள்ள தங்களது விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனராம்.
கிணற்றில் 5 பேரின் சடலங்கள் மிதப்பதை பாா்த்த அப்பகுதியினா், உடனே கரூா் வாங்கல் காவல் நிலையத்துக்கும், கரூா் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
இதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலா் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், கிணற்றிலிருந்து 5 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. ரகுபதி சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
சம்பவம் தொடா்பாக வாங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, குடும்பப் பிரச்னையில் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டாா்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

