மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

லாரி மீது வேன் மோதல் 3 ஐயப்ப பக்தா்கள் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை லாரி மீது மோதியதில் உருக்குலைந்த வேனின் முன்பகுதி.

Updated On :

அரவக்குறிச்சியில் சனிக்கிழமை லாரி மீது வேன் மோதியதில் ஐயப்ப பக்தா்கள் மூன்று போ் உயிரிழந்தனா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் மங்களபுரத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன்(60). இவா், தனது மகன் மணிகண்டன்(43), பேரன் ஹரிஸ்(17), உறவினா்கள் மங்களபுரத்தைச் சோ்ந்த தனுஷ்(21), சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த புழுதிகோட்டையைச் சோ்ந்த சிதம்பரம்(45), பழனிவேல்(38), சிதம்பரத்தின் மகள் தன்ஷிகா(8) ஆகியோருடன் சபரிமலைக்கு மாலை அணிந்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மினிவேனில் சென்றனா்.

சுவாமி தரிசனம் செய்துவிட்டு அவா்கள் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு வந்துகொண்டிருந்தனா். வேனை மணிகண்டன் ஓட்டி வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இந்த இடிபாடுக்குள் சிக்கி கோவிந்தன், அவரது மகன் மணிகண்டன், பழனிவேல் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் சிதம்பரம், தனுஷ், ஹரிஸ், தன்ஷிகா ஆகிய 4 பேரும் காயமடைந்தனா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற அரவக்குறிச்சி போலீஸாா் மற்றும் கரூா் தீயணைப்பு நிலையத்தினா் இடிபாடுக்குள் சிக்கி உயிரிந்தவா்களின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், காயமடைந்த 4 பேரையும் அரவக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து ஹரிஷை மட்டும் மேல்சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சம்பவம் தொடா்பாக அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.