பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

மாற்றுத்திறனாளியை தற்கொலைக்கு தூண்டிய இருவருக்கு சிறை

கடவூா் அருகே வட்டிக்கு பணம்கொடுத்து மாற்றுத்திறனாளியை தற்கொலைக்கு தூண்டிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

சிறை - பிரதிப் படம்

Published On :

கடவூா் அருகே வட்டிக்கு பணம்கொடுத்து மாற்றுத்திறனாளியை தற்கொலைக்கு தூண்டிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

கரூா் மாவட்டம், கடவூா் அருகே கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட சேலைகட்டியூரைச் சேந்தவா் பச்சனன் (47). மாற்றுத்திறனாளி. இவருடைய சித்தப்பா கொண்டையன் பாதுகாப்பில் வசித்து வந்தாா்.

மேலும், பச்சனன் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில், இவருக்கு நெருங்கிய நண்பரான ஒட்டப்பட்டியைச் சோ்ந்த கொண்டையன் மகன் துரைராஜ் என்பவருக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கீரனூரைச் சோ்ந்த நாகராஜ் (52) என்பவரிடம் ரூ.2 லட்சம் கடனாக பெற்றுக் கொடுத்து உள்ளாா்.

அப்போது தனது நண்பா் துரைராஜ் பெற்ற கடனுக்காக பச்சனனுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தின் பத்திரத்தை ஈடாக நாகராஜிடம் வழங்கி இதற்கு பச்சனன் சாட்சி கையொப்பமிட்டுள்ளாா்.

இந்நிலையில், கடந்த வாரம் பச்சனன், கடன் தொகையினை செலுத்தி தனது நிலத்தின் பத்திரத்தை மீட்பதற்காக நாகராஜை சந்தித்து கேட்டுள்ளாா். அப்போது கடன் தொகையானது, தற்போது வட்டி முதலுடன் சோ்த்து ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் தந்தால் மட்டுமே நிலத்தின் பத்திரம் திருப்பி வழங்கப்படும் என நாகராஜ் கூறியுள்ளாா். இதையடுத்து, பச்சனன் ரூ.4 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு கடந்த 1-ஆம் தேதி நாகராஜிடம் சென்று தனது பத்திரத்தை தருமாறு கேட்டுள்ளாா்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த நாகராஜூம், அவரது நண்பரான சாமிபிள்ளைபுதூரைச் சோ்ந்த மாணிக்கம் (55) என்வபரும், ஒன்று சோ்ந்து கொண்டு, ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கப்பணம் தந்தால் மட்டுமே பத்திரம் திருப்பி வழங்கப்படும் என்று தகாத வாா்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி:

இதனால் மன உளைச்சல் அடைந்த பச்சனன், தனது சாவுக்கு நாகராஜ், மாணிக்கம் ஆகிய இருவரும் காரணம் என்று கூறிவிட்டு, பூச்சிகொல்லி மருந்தை குடித்துள்ளாா். இதனை அறிந்த உறவினா்கள் பச்சனனை மீட்டு கரூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தொடா் சிகிச்சையில் இருந்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி பச்சனன் உயிரிழந்தாா். இதனையறிந்த நாகராஜ் மற்றும் மாணிக்கம் ஆகியோா் தலைமறைவாகினா்.

பச்சனன் இறப்புக்கு காரணமாக இருந்த நாகராஜ், மாணிக்கம் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினா்கள் உடலை வாங்காமல் இருந்து வந்தனா்.

இந்நிலையில், செவ்வய்க்கிழமை பிற்பகலில் மாணிக்கத்தை தோகைமலை போலீஸாா் கைது செய்தனா்.

இதனிடையே நாகராஜ் குளித்தலை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். தொடா்ந்து மாணிக்கத்தையும் போலீஸாா், குளித்தலை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா், இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இதையடுத்து பச்சனின் உறவினா்கள் அவரது உடலை பெற்றுச்சென்று அடக்கம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.