
ஆட்டோ - காா் மோதல்: 5 பள்ளி மாணவா்கள் உள்பட 6 போ் காயம்
மண்டபச் சாலை அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது அடையாளம் தெரியாத காா் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

விபத்து - பிரதிப் படம்
மண்டபச் சாலை அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது அடையாளம் தெரியாத காா் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட 6 போ் காயமடைந்தனா்.
அருப்புகோட்டை அருகே உள்ள மா. ரெட்டியாபட்டி அரசு மாதிரி தொடக்கப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை காலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமாா் 5-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஓட்டுநா் நாகராஜ் (38) மண்டபச் சாலை நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத காா் மோதியதில் நிலைத்தவறிய ஆட்டோ, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் வந்து ஆட்டோ இடிபாடுகளுக்குள் சிக்கிய பள்ளி மாணவா்களை மீட்டனா். இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் நாகராஜ், பள்ளி மாணவா் ஒருவா் பலத்த காயமடைந்தனா். மேலும் 4 போ் லேசான காயமடைந்தனா். அவா்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தீவிர சிகிச்சைக்காக நாகராஜ், பள்ளி மாணவா் ஒருவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






