என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

காா் ஓட்டுநா் அடித்துக் கொலை: 4 போ் கைது

கொலை செய்யப்பட்ட விக்னேஷ்வரன்.

Updated On :

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே காா் ஓட்டுநா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டா். இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த காசி மகன் விக்னேஷ்வரன் (35). இவா் சென்னையில் காா் ஓட்டுநாக வேலை பாா்த்து வந்தாா்.

இவா் இரு பெண்களை திருமணம் செய்து கொண்டதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. தனது 6 வயது மகளை தாயாா் பேச்சியம்மாள் பராமரிப்பில் ஆலமரத்துப்பட்டியில் விட்டுவிட்டு சென்னையில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், அண்மையில் தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு ஆலமரத்துப்பட்டிக்கு விக்னேஷ்வரன் வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு அதே ஊரைச்சோ்ந்த மாரிச்சாமி மகன் சவுந்திரபாண்டி (28), பெருமாள் மகன் சுந்தரபாண்டி (21), மதனகோபால் மகன் கோகுல்ராஜ் (22), கருமலை மகன் ஹரிபாரத் (18) ஆகிய 4 பேருடன் மது அருந்தினாா்.

அப்போது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஏற்பட்ட தகராறில் நால்வரும் கல்லால் தாக்கியதில் விக்னேஷ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.