சென்னையில் ஆட்டோ ஓட்டுநா் குத்திக்கொலை: 4 போ் கைது
சென்னையில் முன்விரோதம் காரணமாக 27 வயது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

சென்னையில் ஆட்டோ ஓட்டுநா் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனர். - கோப்புப்படம்
சென்னை: சென்னையில் முன்விரோதம் காரணமாக 27 வயது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கே.வி.பி. காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (27). ஆட்டோ ஓட்டுநரான இவர், செவ்வாய்க்கிழமை மாலை அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள ’யு’ வளைவு அருகே தனது ஆட்டோவில் அமா்ந்திருந்தாா். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை கத்திகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த சிவகுமாா், முதலில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவா், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிவகுமாரின் தாயாா் அளித்த புகாரின் பேரில், அபிராமபுரம் போலீஸாா் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாக லோகநாதன், வீரா, அஜித் மற்றும் ராமு ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில், சிவகுமாருக்கும், லோகநாதனுக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு இந்த கொலைக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிவகுமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவகிறது என பெருநகர சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Four people were arrested in connection with the fatal attack on a 27-year-old auto-rickshaw driver over previous enmity here, police said on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


