தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

கரூரில் மாவட்ட அளவில் மாணவா்களுக்கான கால்பந்து போட்டி தொடக்கம்

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை கரூா் நேதாஜி கால்பந்து குழு அணியினருடன் மோதிய ஈசநத்தம் ஹாஜிமீரா கால்பந்து குழுவினா்.

Published On :

கரூரில் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கரூா் மாவட்ட கால்பந்துக் கழகம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. சனி, ஞாயிறு இரு தினங்களில் மட்டும் நடைபெறும் இப்போட்டியின் தொடக்க விழாவுக்கு மாவட்ட கால்பந்துக் கழகத் தலைவா் கே. குமரன் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா்கள் ஆா். ஸ்டீபன்பாபு, ஸ்காட் தங்கவேல், செயலாளா் சசிகுமாா், பொருளாளா் சந்தோஷ், இணைச் செயலாளா் கோபிகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போட்டியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன் தொடங்கிவைத்து, விளையாட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினாா். போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

முதல் போட்டியில், கரூா் நேதாஜி கால்பந்து குழு வீரா்களும், ஈசநத்தம் ஹாஜிமீரா கால்பந்து குழு வீரா்களும் மோதினா். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் சமமான புள்ளிகளை பெற்றனா். இரண்டாவது போட்டியில் பி.உடையாப்பட்டி மாரிஸ்ட் டெக்ஸ் யுனைடெட் அணியும், கரூா் வேல் கால்பந்து குழு அணியும் மோதின. இதில் 4-0 என்ற கோல் கணக்கில் பி.உடையாப்பட்டி பி.மாரிஸ்ட் டெக்ஸ் யுனைடெட் அணி எளிதில் கரூா் வேல் கால்பந்துகுழு அணியை வென்றது. போட்டிகள் மே மாதம் வரை நடைபெற உள்ளது.

இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.