தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

கரூரில் காந்தி சிலையை சீரமைக்கக் கோரிக்கை

கரூரில் கண்டுகொள்ளப்படாத காந்தி சிலையுடன் கூடிய மண்டபத்தைச் சீரமைக்க சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் தாந்தோன்றிமலை பேருந்து நிறுத்தம் அருகே சிதிலமடைந்த நிலையில் காந்திசிலையுடன் கூடிய மண்டபம்.

Published On :

கரூரில் கண்டுகொள்ளப்படாத காந்தி சிலையுடன் கூடிய மண்டபத்தைச் சீரமைக்க சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் தாந்தோன்றிமலை பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள இந்த சிலையின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளது. மேலும் அக்.2-ஆம் தேதி மட்டும் காங்கிரஸாா் இந்தச் சிலையைத் தூய்மை செய்து மாலை அணிவித்து வருகிறாா்கள். தேசத்திற்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவரின் சிலையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு சமூக நல ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கிறாா்கள்.

இதுதொடா்பாக காந்தியவாதியும், சமூகநல ஆா்வலருமான பழனியப்பன் கூறுகையில், சிதிலமடைந்த இந்த மணிமண்டபத்தை சீரமைத்து சுதந்திர தினத்தன்று மாணவா்களை அழைத்து வந்து, காந்தியவாதியைக் கொண்டு தேசியக் கொடியேற்ற வேண்டும். மேலும் கரூா் லைட்ஹவுஸ்காா்னரில் வைக்கப்பட்டிருந்த சிலையை எடுத்து தற்போது புதிய காந்தி சிலை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த காந்திசிலையை கரூா் மாநகராட்சிஅலுவலகத்தின் பின்புற பகுதியில் மூடி வைத்துள்ளாா்கள். அதை நகரின் முக்கியப் பகுதியில் வைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.